வலை விகடன் ஆகஸ்ட் வெளியீடு

அனைத்து வலையுல நண்பர்களுக்கும் வணக்கம் இங்கு வெளியிடப்பட்டிருக்கும் சக பதிவர்களின் படைப்புகள் நிச்சயம் தங்களுக்கு புதுமையாக தெரியும்.இதில் ஏதேனும் நிறை குறைகள் இருந்தால் கண்டிப்பாக பின்னூட்டத்தில் தெரிவியுங்கள் மேலும் பல பதிவர்களின் அறிமுகங்களுக்கு உதவ தமிழிஷ் தமிழ்மணத்தில் ஓட்டுக்கள் அளித்து இப்படைப்பு அனைத்து வாசகர்களையும் சென்றடைய உதவுங்கள்.
ஒருவாரகால கடுமையான உழைப்பில் உங்களில் ஒருவனின் முயற்ச்சி இது இந்த படைப்புகளை அச்சிலேற்றும் வசதி எனக்கில்லை யாருக்கேணும் அச்சிலேற்றும் ஆசை இருந்தால் நிறைவேற்றிகொள்ளலாம்.இதில் தற்போது 30 பக்கங்கள் வெளியிடப்பட்டிருக்கின்றன. அடுத்தடுத்த பதிவில் பக்கங்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் தங்களின் வரவேற்பை பொறுத்து.
நன்றி-உங்களில் ஒருவன்


வலைவிகடன்
தமிழ் வலைப்பூக்களின் சிறந்த வலைபூக்களின் பதிவுகள் இவ்வலைப்பூவில் இடம் பெறும்

வழக்கமான பத்திரிக்கைகள் வடிவில் பல வித புதுமைகளுடன் தங்கள் கண்களுக்கு விருந்தாக

இச்சுதந்திர தினம் முதல் மாதம் ஒருமுறை வெளிவரும்.

முற்றிலும் மாறுபட்ட ஜனரஞ்சகமான வலைபூக்களின் கதை,கவிதை,நகைச்சுவை,சினிமா,விமர்ச்சனம்,ஆன்மீகம்,முதலியவற்றின் அம்சங்களுடன் மாதம் 30 பதிவுகள் சிறப்பாக வெளிவரும்.எந்த வித விளம்பர நோக்குடன் இல்லாமல் உங்கள் படைப்புகளை வாசிக்கும் ஒரு வாசகனின் வெளியீடு.இம்முயற்ச்சி பின் வரும் காலத்தில் அச்சில் ஏறும் என்ற நம்பிக்கையுடன் நான்.தங்கள் படைப்புகள் இன்னும் சில தினங்களில் வித்தியாசமான வண்ணமிகுதியால் வெளியாகும் வரை பொறுத்திருங்கள்.

ஏதோ ஒரு பத்திரிக்கையில் வருவதை விட்டு நமக்கான ஒரு பத்திரிக்கையாக இருக்கட்டுமே..

தங்கள் வாழ்த்துக்களுடன் ஆகஸ்ட் 15 முதல்..உங்கள் கண்ணுக்கு விருந்தாக வருகிறது வலை விகடன்.